Publisher
SIBI Pathippagm
Category
General
நேதாஜி
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
152
Year
2010
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹255.00
நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மயிர்க்கால்கள் கூச்சறியும். அடிமையாய் கிடந்த இந்தியாவின் புதல்வர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த தன்மானத் தலைவன் நேதாஜி. விடுதலை என்பது அடிமைப்படுத்தியவனிடம் கேட்டுப் பெறுவதல்ல. அவனிடம் இருந்து எடுத்துக் கொள்வது என்று முழங்கியவர். அவரது வீர முழக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடறியைப் பிடித்து ஆட்டியது. சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயர் பிரிட்டிஷாரின் செவிகளுக்குள் நெருப்புக் குழம்பாய் இறங்கியது. அவருடைய பேச்சு அனலைக் கக்கியது. புரட்சி நெருப்பை பற்றவைத்தது. அகிம்சை தத்துவம் இந்தியாவுக்கு உதவாது. பிச்சை கேட்டுப் பெறும் சுதந்திரத்தை மக்களால் பாதுகாக்க முடியாது. ரத்தம் சிந்திப் பெறும் சுதந்திரம்தான் பாதுகாக்கப்படும்.
இந்தியத் தாயின் விடுதலைக்காக ரத்தம் சிந்துவதற்கு 35 கோடி மக்கள் தயாராக இருக்கிறார்கள். ராணுவம் அமைத்து வெள்ளையரை விரட்ட வேண்டும் என்றவர் போஸ். அவருக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து காந்தியே அவரை காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்தார். 41 வயதில் மாபெரும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான போஸுக்கு தேசத்தலைவர் என்ற பட்டத்தை கொடுத்தார் மகாகவி ரவீந்திர நாத் தாகூர். காங்கிரஸ் தலைவராக போஸ் இருந்தால் விடுதலை குறித்து பேசுவது வீண் என்று பிரிட்டிஷ் அரசு காந்தியிடம் கூறியது. பிரிட்டிஷ் அரசின் பேச்சைக் கேட்டு போஸை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடாது என்று எதிர்த்தவர் காந்தி. காந்தியின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, காந்தி நிறுத்திய வேட்பாளரை தோற்கடித்தவர் நேதாஜி. நேதாஜியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்காக உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. அவருக்காக நேதாஜியை காங்கிரஸிலிருந்து நீக்கினார்கள்.
© Shanlax
Reviews
There are no reviews yet.