Be the first to review “மகான் பி.எஸ்.ஐயர் அருளிய தஜக நீலகண்டீயம்” Cancel reply
வருட பலனை எடுத்துச் சொல்வதற்காக, இந்தியாவில், முக்கியமாக வட இந்தியாவில், தஜக முறையை மட்டும் தான், பின்பற்றுகிறார்கள். இதில் பல்வேறு சிறப்பு அணுகூலங்கள் இருக்கின்றன.
வருட பலன் கணிக்கும் முறை முற்றிலும் வேறுபட்டதாகும். ஹட்டா பலம், பஞ்சவர்க்க பலம், துவாதச வர்க்க பலம், முந்த்தா கணணனம், கிரகப் பார்வை, இவைகள் அனைத்தும் தஜக முறை அடிப்படைக் கணிதமாகும்.
உடுதெசையைப் போல் அல்லாமல், வருட தெசை கணிப்பது பத்தியாம்சம், கிஸ்ஸாம்சம் இவற்றின் அடிப்படையாகும்.
தஜக முறையிலான சாஸ்திரத்தை எளிதாகவும், மாணவர்களுக்குக் கூட இந்த முறை புரியும்படி விளக்கமாகவும், உதாரணங்களுடனும், முதன் முறையாகத் தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வழங்குகின்ற அரிய தொண்டினை மதிப்பிற்குரிய மகான் பி.எஸ்.ஐயர் அவர்கள் ஆற்றிருப்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே ஒரு நற்பேறு வாய்த்ததாகும்.
சுருங்கக் கூறினால், தஜக முறை, பராசரர் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மகானின் நூல்களைப்படித்து பலன் கூறுகிறபோது, நிச்சயமாக உங்கள் பலன் கூறும் ஆற்றல் 90 சதவிகிதம் அதிகரிக்கும்
Reviews
There are no reviews yet.