Publisher
SIBI Pathippagm
Category
General
பின்லேடன்
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
128
Year
2016
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹245.00
ஒசாமா பின்லேடன்
அமெரிக்காவை கதிகலங்கச் செய்து அதன் மேலாதிக்கப் போக்கிற்கு சவாலாக இருந்தவர். ஜிகாத் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய புனிதப் போர் என்கிற பெயரில் உலகநாடுகள் பலவற்றில் இவர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான அப்பாவிகள் ஆயிரமாயிரம். அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்பட்ட இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்கிய அன்றுதான் பயங்கரவாதத் தின் கோரமுகத்தை உலகமக்கள் நேரடியாக கண்டார்கள். சிறுவயதில் சாதுவாகவும், கூச்ச உணர்வுடனும் வளர்ந்த ஒசாமா உலகின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவர்.சுகபோக வாழ்க்கையைத் துறந்து, எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தானின் மலைக் குன்றுகளில் காலத்தைக் கழித்தவர்.
ஜிகாத் போராளிகள் இவரை வாழும் இறைத் தூதராக வரித்துக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளை அப்படியே பின்பற்றி மற்ற இஸ்லாமியர்களின் மதிப்பைப் பெற்றிருந்தார். 2001 செப்டம்பர் 11 ஆம் தேதியிலிருந்து ஒசாமாவைப் பிடிப்பதற்காக மட்டும் அமெரிக்க அரசு சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இந்த நடவடிக்கையில் அது இழந்த மனித உயிர்கள் ஏராளம். எவ்வளவு செலவழித்தாலும் உலக நாடுகள் மத்தியில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதே அதன் உண்மையான நோக்கமாக இருக்கிறது. அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை கைவிட்டு உலகநாடுகள் சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் போதும். பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்பதே பொதுவான கருத்து.
© Shanlax
Reviews
There are no reviews yet.